Sunday, January 6, 2013

கேட்டதில் ரசித்தவை..



காலதாமதமாய் செய்யும் எந்த ஒரு

காரியமும் அதன் முழுப்பலனை அடைவதில்லை.

சரியான நேரத்தில் கேட்கப்படாத மன்னிப்பும்

கொடுக்கப்படாத மன்னிப்பும் பயனற்றது.

ஒருவனின் அறியாமை இன்னொருவனின்

ஆயுதம் ஆகிறது.

வாதியும் பிரதிவாதியும் இறந்துவிட்ட பின்னரும்

வழக்கு மட்டும் வாழ்கிறது இன்னும் வாய்தாவுடன்.

நீ தொடர்ந்து செல்லும் ஒன்று உன்னை மதிக்காவிட்டால்

ச்சி போ என்று திரும்பி நட அது உன்னை தொடர்ந்து வரும் உன்

நிழல் போல்.

தன் உரிமைகள் அறியா மனிதன் வேரற்ற மரமாகிறான் .


~ஆதிரா

Thursday, January 3, 2013


இன்றைய அரசியல்வாதி


 
இடம் தேடி அலைகின்றான் பின்
 
இரை தேடி அலைகின்றான்

இரை தேடி முடித்த பின்

இடம் பற்றவில்லையோ??

இடம் மாற்றி கொள்கின்றான் மீண்டும்..
 
 
இரை தேடி அலைகின்றான்

தேடி தேடிச் சேர்க்கின்றான் இவன்

தேடாத பொருளில்லை அவனியிலே..

என்று தான் தேடுவானோ இவன் மக்களின் தேவையை!!

~ யாரோ



Tuesday, January 1, 2013

வேடிக்கை



 

 

 

 

 

ஐந்து வயதில் நான் என்ன சொன்னாலும் என் அம்மா "சும்மா இரு மா   உனக்கொன்றும் தெரியாது"
 
 இருபந்தைந்து வயதில் என் அம்மா என்ன சொன்னாலும் நான் "சும்மா இரும்மா உனக்கொன்றும் தெரியாது"

 
 
  ~ ஆதிரா






என்ன ஒரு அபார வளர்ச்சி!!!

 
 
 
 
 
 
 
தலை நிமிர்ந்து சொல்வேன் இன்று தமிழகத்தின்
 
விலை உயர்ந்த பொருட்களில் நானும் ஒன்று..
 
இப்படிக்கு,
கல்வி