Wednesday, February 27, 2013

பெண்ணே நீயே உன்னை இழிவுப் படுத்திக் கொள்கிறாயே,ஏன்??

நண்பர்களுக்கு வணக்கம்..

முகநூளில் நான் மூழ்கி இருந்த நேரத்தில் கடந்து வந்த செய்தி ஒன்றை பார்த்து அதிர்ந்து தான் போனேன்.தொடர்ந்து இது போன்ற செய்திகள் நடக்கையில் பெண் இனத்தின் மீது ஒரு பெண்ணுக்கே கடுங்கோபம் வருகிறது.

நான் படித்தச்  செய்தி பின்வருமாறு..


கேரளா திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அமிர்தா.இவர் கராத்தேவில் நன்கு பயிற்சிபெற்றவர்.சிலதினங்களுக்கு முன்பு இவர் தனது பெற்றோருடன் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார்.அப்போது அங்கு கார்பார்க்கிங் செய்வதில் அவருடைய பெற்றோருக்கும் இரு இளைஞர்களையே சிறுவாக்குவாதம் ஏற்பட்டது.


இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தா அந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் ஒருவரது மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியுள்ளது.காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.இந்த பிரச்னை விவகாரமாக உருவெடுக்க அமிர்தா உடனடியாக காவல்நிலையம் சென்று தன்னை மூன்றுபேர் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் அதற்க்கு எதிர்ப்புதெரிவித்தபோது அவர்கள் தன்னுடைய பெற்றோரை ஆபாசமாக திட்டியதாகவும் தற்க்காப்பிற்க்காக இருவரையும் தாக்கியதாகவும் புகார் செய்தார்.

சும்மா இருந்த வாய்க்கு அவில் கிடைக்க சில ஊடகங்கள் அந்த பெண்மணியை போற்றியும் அந்த சராசரி இளைஞர்களை காமக் கொடூரர்களாக வர்ணித்தும் எழுதி அதன் விளைவாக பார்த்துக் கொண்டிருந்த வேலையும் இழந்திருக்கிறார்கள்.இது தான் ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்பதோ??

கோபம் வந்த சில இளைஞர்களின் முயற்சியால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டு , அமிர்தாவின் பக்கமே தவறு இருக்கிறது என்று அவர் மீது வழக்கு தொடர உத்தரவிடப் பட்டிருக்கிறது .கொடுமை, நல்ல தீர்ப்பை சொல்லியதன் பலனாய்  அந்த நீதிபதியும் இடம் மாற்றப் பட்டிருக்கிறார்.

கட்டட்ட சுதந்திரத்தில் கருத்து கூறுகிறேன் என்ற பெயரில்  கண்டதை சமூக வலைத்தளத்தில் எழுதி அதற்கு வந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், அதன் விளைவாய் ஒரு இளைஞனை இதே பாணியில் மாட்டிவிட்ட நம்ம அக்கா பாடகி சின்மயி பத்தியும் எல்லாரும் படிச்சிருப்பிங்க.

பிரபலம் என்ற போர்வையில் அமர்ந்திருக்கும் பெண்கள் மட்டும் தான் இதை செய்கிறார்கள் என்றில்லை.ஒரு சில சாராசரி பெண்களும் தான்.இவை எங்கேனும் ஒரு மூளையில் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.


தான் செய்யும் தவறிலிருந்து தப்பித்துக் கொள்ளவோ, தனக்கு பிடிக்காத ஆண் மகனை பழி வாங்கவோ, நீங்க ரூம் போட்டு யோசிச்சிங்கனா ஆயிரம் வழிக் கிடைக்கும் சகோதரிகளே .அதை விடுத்து, ஏன் புனிதமான பெண்மையை ஊடகமாக கையில் எடுத்து, அவன் என்னைய கைய புடிச்சு இழுத்தான்,இவன் என்னைய செக்ஸ் டார்ச்சர் செஞ்சான்னு  உங்கள நீங்களே இழிவு படுத்தி பெண்ணினத்தையும் கேவலப் படுத்தறீங்க.

அவ்வாறான பெண்களுக்கு,

1. பெண்மை அல்லது கற்பு எனப்படுவது யாது??? 

2. பெண்ணுரிமை அல்லது பெண்ணடிமைத்  தனம் என்பது யாது??

ஈழத்தில் கொத்து கொத்தாகப்  பெண்களை வேட்டையாடி வீதியில் எறிந்தாலும் கேட்க ஒரு நாதியில்லை.இங்க ஒரு பொட்டபுள்ள கண்ணக் கசச்கிட்டா போதும் நீலிக் கண்ணீரா நிஜக் கண்ணீரான்னு கூடத் தெரியாம பாதிக்கப் பட்டவங்களுக்கு எதிரா உடனடி நடவடிக்கையாமா!!

இந்த ஊடகங்கள் என்று தான் உண்மைக்கு உழைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.உள்ளதை உள்ளபடி எழுதாவிட்டாலும் பரவாயில்லை இல்லாததை இட்டுக் கட்டி எழுதி நீங்கள் பேனாவின் புனிதத்தை கெடுக்காதீர்கள்.

சாத்தி ரங்கள் பலபல கற்பராம் 
சவுரி யங்கள் பலபல செய்வராம் 
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம் 
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம் 
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் 
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம் 
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம் 
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!!!

நமது முண்டாசுக் கவிஞன் இன்று இருந்திருந்தால்,

புதிய பொய்ம்மைகள் யாவும் கற்பராம்
தூத்தி ஆண்மக்கள் சபித்திட வாழ்வராம் 

என்றல்லவா எழுதியிருப்பார்.நல்ல வேலை இந்த கொடுமைகளைப் பார்த்து நான் சொன்னப்  பெண்விடுதலை இதுவல்ல என்று நெஞ்சுவெடித்து சாவதற்கு அவர் இன்று உயிரோடில்லை.

காலம் உன் குலத்திற்கு எதிராகக் கூட உன்னை எழுத வைத்து விட்டதடி ஆதிரா.


இதை தமிழ்மணத்தில் பரிந்துரையிட்டீர்கள் என்றால் மகிழ்வேன்.


பணிவுடன் ,

ஆதிரா.



9 comments:

  1. புதிய பொய்ம்மைகள் யாவும் கற்பராம்
    தூத்தி ஆண்மக்கள் சபித்திட வாழ்வராம் //
    அருமை கவிஞரே

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் என்று சொன்னது பாரதியைத் தான் என்று நம்புகிறேன்..வருகைக்கு நன்றி..






      Delete
  2. மிகவும் வருந்தத்தக்க விடயம் ஆதிரா..

    ReplyDelete
    Replies
    1. ஆம் அகல்..நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்..வருகைக்கு நன்றி.

      Delete
  3. பாரதியையும் துணைக்கழைத்துச் சொல்ல வந்ததை ஆணித்தரமாகச் சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
  4. ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் என்று பாரதி வழியில் செல்கிறோம் என்று சொல்பவர்களும் உண்டு..என் பாரதி கண்ட பெண் சுதந்திரக் கனவு இதுவல்ல என்று உணர்த்தவே அவரையும் இழுக்க வேண்டியதாயிற்று.வருகைக்கு நன்றி தோழரே...

    ReplyDelete
  5. ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்...

    இப்படியே எடுத்துக்கொள்வோம் கொஞ்ச நாளைக்கு....

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஒட்டு மொத்தமாச் சொல்லிற முடியாது நண்பரே...நடக்கும் விடயத்தைப் பொருத்தது. வருகைக்கு நன்றி..

      Delete
  6. ஆவது பெண்ணாலே ஆணவம் தலைதூக்க எல்லாம் வீழ்வதும் உன்னாலே..........

    ReplyDelete